Totel Page viwes

Saturday, 23 November 2013

This is BUSINESS..


Dad:" I want u 2 marry a girl of my choice..

Son:" No Dad:" The girl is Bill Gates' daughter..

Son:" Then ok.....

Dad goes 2 Bill Gates

Dad:" I want ur daughter 2 marry my son..

Bill Gates:" No Dad:" My son is d CEO of the World Bank..

Bill Gates:" Then ok..

Dad goes 2 the President of the World Bank..

Dad:" Appoint my son as the CEO of ur bank..

President:"No!

Dad:" He is the son-in-law of Bill Gates..

President:" Then ok! :p
This is BUSINESS..

Thursday, 21 November 2013

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்


தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க ...

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் அப்பாவுக்குஎன்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,
மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே பின் பக்கம் பார்க்கஎன்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!!!
ஒரு கணவர் கூறுகிறார்:

முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.

அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!

மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்:

டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ

சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.

என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

என் மகனைப் பார்த்து, நேற்று இரவு என்ன தான் நடந்தது? என்று வினவினேன்.

என் மகன், அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்! என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான் பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ? என்றேன்.

என் மகன் அமைதியாக அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள் என்றான்...............

எல்லோரையும் மிஞ்சும் மனப் பக்குவத்தை கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு

எவரையும் மிஞ்சும் கல்வி கொடுக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் செல்வம் குவிக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் ..அழகும்..புகழும் கொடுக்க வேண்டாம்

எல்லோரையும் மிஞ்சும் மனப் பக்குவத்தை கொடுங்கள்

கஷ்டங்கள் விதைத்து வெற்றி அறுவடை செய்ய கற்றுத் தாருங்கள்

தன் சுயநலம் . ..தன் தேவைகள்...எனத் தன்னை தானே குறுக்கிக்கொண்டு விதை விட்டு பழுக்கும் போன்சாய் மரங்களாய் அல்லாது

வயதுவேர் தாங்கி ஓய்ந்தாலும்.............பாசவிழுது பரப்பி நமைத் தாங்கும்.....ஆலம் விதைகளாய் அவர்களை வளருங்கள்......